ஆகஸ்ட் 10, 2019 அன்று, பள்ளியிலும், கல்லூரியிலும் பயிலும் குழந்தைகள், பெரியவர்களுடன் சேர்ந்து Chapel Hill-ல் உள்ள Ronald MacDonald House-ல் கூடினார்கள். Ronald MacDonald House, இந்த பகுதி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் தீவிர நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஆறுதலாக உதவும் வகையில், அந்த குடும்பங்களுக்கு தங்குவதற்கு இட வசதியும், சமைப்பதற்கு சமையல் அறையும் கொடுத்துள்ளது. நமது RTP தமிழ் கத்தோலிக்க சங்க குழுவினர் அந்த சமையலறையில் சென்று, 45-50 பேருக்கு உணவு சமைத்து பரிமாறினார்கள். சமைத்தது மட்டுமின்றி, உணவு மெனுவை திட்டமிட்டு , சொந்த செலவில் அதற்கான பொருட்களை வாங்கி, சுட, சுட உணவை பரிமாறினார்கள். இந்த குழு இரண்டு மணிநேரங்களில் மொத்தம் 10 விதமான உணவு வகைகளை தயாரித்து, அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சமைத்த உணவை, துயரில் உள்ள குடும்பங்கள் அனுபவித்து உண்ணுவதை பார்த்தது, மிகவும் திருப்தி அளித்தது. இந்த சேவை துன்பத்தால் துவளும் குடும்பங்களுக்கு, நம்மால் இயன்ற சிறிய துயர் துடைத்த ஒரு அற்புத பணியாக அமைந்தது. நமது குழந்தைகள், மனித வாழ்க்கையின் துன்பங்களையும், போராட்டங்களையும் புரிந்துக் கொள்ளவும், அவர்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும், ஒரு சிறந்த வாய்ப்பாக இது அமைந்தது. இந்த பணியில் பங்குப் பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும், ஏற்பாடு செய்த வித்யா அவர்களுக்கும் எங்களது வாழ்த்துக்கள். இது போன்ற தன்னலமற்ற தொண்டால் இறைவன் அன்பை இந்த உலகுக்கு மேலும் அறிவிக்க வாழ்த்துக்கள்.
On August 10, 2019, many of our youth got together with a few adults and cooked a full meal at the Ronald MacDonald House in Chapel Hill to serve the families of seriously ill children undergoing treatment in our area hospitals. This involved planning the menu, getting the ingredients and cooking at the Ronald MacDonald House kitchen for approximately 45-50 people! The group did an awesome job preparing a total of 10 dishes in a couple of hours and served dinner on time. The meal was a big hit and it was very satisfying to see the families enjoy the food. This event helped our teens understand the struggles of human life and the importance of making an impact on the community.