Children Mass – 2018

RTP Tamil Catholic Association. Mass in Tamil with Children’s Choir. RTP தமிழ் கத்தோலிக்கச் சங்கம், குழந்தைகள் பங்கேற்கும் தமிழ் திருப்பலி.


Youth Mass – August 18, 2019

Text : Antony Jeyaraj

What an amazing thing we all did see. Our youth team did a wonderful job last evening during our monthly Mass. One of the purposes of our organization is to pass our tradition (worshiping/ praising our lord in our mother tongue) to our next generation. I think, yesterday we saw the first step towards that. I really appreciate the youth team for their dedication, involvement and execution. Also. I thank Lazar, Nirmala, Susan and all the parents for their efforts and involvement. With God’s grace and with all your help, we are on the right track. Keep the good work going👍

Volunteering at Ronald McDonald house

ஆகஸ்ட் 10, 2019 அன்று, பள்ளியிலும், கல்லூரியிலும் பயிலும் குழந்தைகள், பெரியவர்களுடன் சேர்ந்து Chapel Hill-ல் உள்ள Ronald MacDonald House-ல் கூடினார்கள். Ronald MacDonald House, இந்த பகுதி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் தீவிர நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஆறுதலாக உதவும் வகையில், அந்த குடும்பங்களுக்கு தங்குவதற்கு இட வசதியும், சமைப்பதற்கு சமையல் அறையும் கொடுத்துள்ளது. நமது RTP தமிழ் கத்தோலிக்க சங்க குழுவினர் அந்த சமையலறையில் சென்று, 45-50 பேருக்கு உணவு சமைத்து பரிமாறினார்கள். சமைத்தது மட்டுமின்றி, உணவு மெனுவை திட்டமிட்டு , சொந்த செலவில் அதற்கான பொருட்களை வாங்கி, சுட, சுட உணவை பரிமாறினார்கள். இந்த குழு இரண்டு மணிநேரங்களில் மொத்தம் 10 விதமான உணவு வகைகளை தயாரித்து, அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சமைத்த உணவை, துயரில் உள்ள குடும்பங்கள் அனுபவித்து உண்ணுவதை பார்த்தது, மிகவும் திருப்தி அளித்தது. இந்த சேவை துன்பத்தால் துவளும் குடும்பங்களுக்கு, நம்மால் இயன்ற சிறிய துயர் துடைத்த ஒரு அற்புத பணியாக அமைந்தது. நமது குழந்தைகள், மனித வாழ்க்கையின் துன்பங்களையும், போராட்டங்களையும் புரிந்துக் கொள்ளவும், அவர்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும், ஒரு சிறந்த வாய்ப்பாக இது அமைந்தது. இந்த பணியில் பங்குப் பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும், ஏற்பாடு செய்த வித்யா அவர்களுக்கும் எங்களது வாழ்த்துக்கள். இது போன்ற தன்னலமற்ற தொண்டால் இறைவன் அன்பை இந்த உலகுக்கு மேலும் அறிவிக்க வாழ்த்துக்கள்.

On August 10, 2019, many of our youth got together with a few adults and cooked a full meal at the Ronald MacDonald House in Chapel Hill to serve the families of seriously ill children undergoing treatment in our area hospitals. This involved planning the menu, getting the ingredients and cooking at the Ronald MacDonald House kitchen for approximately 45-50 people! The group did an awesome job preparing a total of 10 dishes in a couple of hours and served dinner on time. The meal was a big hit and it was very satisfying to see the families enjoy the food. This event helped our teens understand the struggles of human life and the importance of making an impact on the community.

திருப்பயணம் – 2019

திருப்பயணம் -2019
https://saintlawrencebasilica.org/

இந்த வருடம் திருப்பயணமாக வடக்கு கரோலினாவில் Ashville-ல் உள்ள St.Lawrence Basilica -க்கு செல்ல முடிவு செய்தோம். July 13,2019 சனிக்கிழமை ஒரு நாள் பயணம் செல்ல திட்டமிட்டோம். இந்த வருட திருப்பணத்தை திரு. லாசர் அவர்கள் ஒருங்கினைத்து வழங்கினார் .இந்த வருடம் ஆறு குடும்பத்தினர்கள் மொத்தம் 21 உறுப்பினர்கள் இந்த திருப்பயணத்தில் கலந்துக் கொண்டனர்.

அவர்களின் விவரங்கள் கீழே

லாசர் – தீபா குடும்பத்தினர்
சதீஸ் – அனித்தா குடும்பத்தினர்
ஜோன்ஸ் – அவிலா குடும்பத்தினர்
அந்தோணி ஆல்வின் – அன்னா குடும்பத்தினர்
லியோ – சினேகா குடும்பத்தினர்
சவேரியார் – ராணி குடும்பத்தினர்

இருபத்து ஒன்று பேரை ஏற்றி செல்ல தகுந்த வாகனம் இல்லாததால், அவரவர்கள் வாகனத்தில் செல்ல முடிவு செய்தொம். அனைவரும் July 13,2019 சனிக்கிழமை காலை 10 மணிக்கு st. Michael, Cary ஆலயத்தில் கூடினோம். சிறு செபம் செய்து எங்கள் பயணத்தை தொடங்கினோம் . மதிய உணவிற்கு பிற்பகல் 1 மணிக்கு Hickory,NC ல் உள்ள Henry River Park -ல் கூடினோம். அனைவரும் தங்கள் வீட்டிலிருந்தது அறுசுவை உணவை சமைத்து எடுத்து வந்திருந்தார்கள். அங்கு உணவு அருந்திவிட்டு, சிறிது நேரம் இளைப்பாறி விட்டு, அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு park-லிருந்து கிளம்பினோம்.

மாலை 5 மணிக்கு திருப்பலி இருந்தது. திருப்பலிக்கு முன், ஆலயத்தின் முன் உள்ள அன்னை மரியாள் சிலை முன்பு செபமாலை செய்தொம். செபமாலை முடிந்தவுடன் 5 மணி திருப்பலியில் கலந்துக் கொண்டோம்.
திருப்பலி முடிந்தவுடன் ஆலயத்தை Mrs.Carol சுற்றி காட்டினார்கள். இந்த ஆலயத்தின் வரலாறை கீழுள்ள link-ல் கொடுத்துள்ளார்கள்.
https://saintlawrencebasilica.org/the-architect

Tour முடிந்தவுடன் சுமார் 7 மணி அளவில் வீட்டை நோக்கி கிளம்பினோம். இடையில் இரவு உணவை அருந்திவிட்டு வீட்டிற்கு திரும்பினோம். இது ஒரு நல்ல பக்தி முயற்சியாக அனைவரும் மகிழ்ந்தாரர்கள். இது அனைவருக்கும் மகிழ்சியாக இறைவன் அருளை பெற உதவும் ஒரு பயனமாக இது அமைந்தது.

Spring Social – April 27, 2019

RTP தமிழ் கத்தோலிக்கச் சங்க உறுப்பினர்களின் வருடாந்திர வசந்த சுற்றுலா

படைப்பு : ராஜி ஆதர்ஷ்

RTP தமிழ் கத்தோலிக்கச் சங்க உறுப்பினர்களின் வருடாந்திர வசந்த சுற்றுலா இந்த வருடம் 2019, ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி வெற்றிகரமாக நடந்தது.
இந்த வருடமும் RTP தமிழ் கத்தோலிக்க உறுப்பினர்கள் Crabtree lake, Dogwood shelter இடத்தில் கூடி சந்தித்தோம் . குழுக்கள் அமைத்து, விழாவின் பொறுப்புகள் அனைத்தும் உறுப்பினர்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

தன்னார்வ உறுப்பினர்கள்:
ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு – சதீஷ்
அமைப்பு – விவேக் மற்றும் சதீஷ்
உணவு ஒருங்கிணைப்பு – நிர்மலா, சதீஷ்
ஜோடி விளையாட்டுகள் – விவேக், ஸ்டான்லி
குழந்தைகள் விளையாட்டுகள் – ஜெசிகா, ஹன்னா மற்றும் இளைஞர் குழு

நடத்திய விளையாட்டுக்கள்:
கிரிக்கெட்
பந்து வீச்சு, மட்டை பந்து
ஜோடி : பந்தை எடுத்து நட
கரண்டி -நிலக்கடலை நடை
செய்தித்தாள் ஜோடி விளையாட்டு

காலை 9 மணியளவில் தன்னார்வ உறுப்பினர்கள் சுற்றுலா இடத்தை அடைந்தனர்.9:30 மணியளவில் முன்கூட்டியே வரும் உறுப்பினர்களுக்கு அமைப்பை ஏற்பாடு செய்தனர். உறுப்பினர்கள் ஒருவர் ஒருவராக வர ஆரம்பித்தார்கள். அனைவரும் வரும் வரை மதிய உணவுகள் வரிசையில் வைக்கப்பட்டன.
மட்டை பந்து குதூகலமாக தொடங்கியது, ஆண் உறுப்பினர்கள் மட்டை பந்து ஆட்டத்தில் ஆரவாரித்தனர்.மதியம் 12:30 மணியளவில் மதிய உணவுகள் முதலில் குழந்தைகளுக்கும் , பிறகு பெரியவர்களுக்கும் வழங்கப்பட்டன. பின் உறுப்பினர்கள் பந்து வீச்சு ஆட்டத்தை விளையாட ஆரம்பித்தனர்.

1:30 மணியளவில் பலரது வீட்டு உணவு அறுசுவையாக இருந்தது,அனைத்து உறுப்பினர்களும் உணவு உண்ணத் தொடங்கினார்கள்.

2:00 மணியளவில் சிறுவருகளுக்கான பந்தை எடுத்துநட விளையாட்டு ஆரம்பித்தார்கள். குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக ஆடினர். குழந்தைகள் விளையாட்டுப் பகுதியில் சருக்கு மரம், வளைவுக் கம்பி விளையாடத் தொடங்கினர். ஒரு புறம் சிறுவர்கள் அவர்கள் விரும்பிய ஆட்டத்தை ஆட மறுபுறம் பெரியவர்கள் அவர்களுக்கான விளையாட்டை ஆடத் தொடங்கினர்.

முதல் ஆட்டமாக ஜோடிகள் பந்தை கீழே விழாமல் ஒரு புறம் இருந்து மறுபுறம் சேர்ந்தே கடந்து சென்று ஆடி மகிழ்ந்தனர். பின் செய்தித்தாள் மீது கணவன் மனைவி ஏறி கீழே விழாமல் போட்டியை ஆடினர் , அதில் கால் மட்டும் கீழே இருக்க அவர்களின் அன்பு மேலோங்கி நின்றது. ஆட்ட இடைவேளையில், ஐஸ் கிரீம் கொடுக்கப்பட்டது , சிறுவர்கள் மகிழ்ச்சியில் துள்ளினர்
பெண் உறுப்பினர்கள் கரண்டி -நிலக்கடலை நடை ஆட்டத்தை ஆடி குதூகலித்தனர்.


4:00 மணியளவில் பெண் உறுப்பினர்கள் சுடச்சுட பஜ்ஜி சுடும் ஏற்பாட்டை ஆரம்பித்தார்கள். பெண்கள் இரு குழுக்களாக சமையல் வேளையில் இறங்கினர். முதல் குழு: வித்யா, அவிலா, அனிதா, ஜஸ்டினா, ஹென்னா உருளைக்கிழங்கு, வெங்காயம், வாழைக்காயை அருமையாக வெட்ட, இன்னொரு குழு: ராணி , கோல்டா மசாலாவை பிசைய, சுடச்சுட ஆரம்பமானது பஜ்ஜிக் கடை.
அடுப்புத் தீ பரவாமல் இருக்க தலைவர் சவேரியார் தடுப்பு அட்டை தயார் செய்து வைக்க, பஜ்ஜி சுடும் பணி தொடங்கியது. முழு அணியும் தடுப்புச் சுவராக பிளாஸ்டிக் பையைப் பிடித்து நின்றனர். சுவையான பஜ்ஜி பரிமாறத் தொடங்கப்பட்டது.
சமையலில் பெண்களுக்கு ஆண்கள் சளைத்தவர்கள் இல்லை என நிரூபிக்க ஆண்கள் அணி களம் இறங்கியது. ஆதர்ஷ் மற்றும் ஆரோக்கிய ராஜ் சமையல் பணியை கையில் எடுத்துக்கொண்டனர். ஆண்கள் அணி சதீஷ், அந்தோணி, பால், சவேரியார் தடுப்புச் சுவர்களாக நின்றனர், மட மட வென பஜ்ஜிகள் சுடப்பட்டன.
பஜ்ஜி சுட்டு முடிப்பதற்கு முன் BBQ கிரில் லாசர் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. சுடச்சுட கோழி பர்கரும், காய்கறி பர்கரும் தயாராயின.
மறுபுறம் பூவைச் சுற்றும் வண்ணத்துப் பூச்சிகளாய், குழந்தை ஆதிராவைச் சுற்றி சிறுமிகள் கூட்டம். அரங்கேறியது பாடல், நாடகம், கதை கூறும் போட்டி, யாருக்கும் யாரும் சளைத்தவர் இல்லை என சிறுமிகள் போட்டி போட்டுப் பாட்டுப் பாடினார்கள்.
BBQ கிரில் சிக்கனை ருசிக்க, பெண்கள் ஒரு புறம் பூங்கா உலா முடிக்க , சிறுவர்கள் ஆட்டத்தில் திளைக்க நெருங்கியது கிளம்பும் நேரம். மின்னலாகப் பறந்து வந்த அனைத்து உறுப்பினர்களும் துப்புரவுப் பணிய த் தொடங்கினர். பிரிந்து செல்ல மனம் இல்லாமல் பிரியா விடை கொடுத்து அவரவர் வாகனத்திற்குச் சென்றனர்.
என்ன ஓர் அருமையான தினம்!! அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்த தினம். இந்த நிகழ்வுகள் இறைவனால் கொடுக்கப்பட்டப் பரிசு, இதே ஆனந்த உணர்வோடு எல்லா நிகழ்வுகளிலும் பங்கு கொள்ள உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். நன்றி.