RTP தமிழ் கத்தோலிக்கச் சங்க உறுப்பினர்களின் வருடாந்திர கிறிஸ்து பிறப்பு விழா
படைப்பு: ராஜி ஆதர்ஷ்
RTP தமிழ் கத்தோலிக்கச் சங்க உறுப்பினர்களின் வருடாந்திர கிறிஸ்துமஸ் விழா இந்த வருடம் (2019) டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி Twin lakes Club House, Cary யில் வெற்றிகரமாக நடந்தது. இந்த வருட விழாவினை திரு ஸ்டான்லி அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.
வண்ணமிகு கோலம் வாயிலில் வரவேற்க, அழகிய தோரணை அலங்காரம் கண்களை கவர இனிதே ஆரம்பமானது கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டம்.
அனைத்து குடும்பங்களும் பாரம்பரிய உடையில் அமர்ந்திருக்க, பாடகர் குழு வரவேற்பு பாடலை பாட, அருள்தந்தை லூர்துராஜ் அவர்கள் திருப்பலியை பிற்பகல் மூன்று மணிக்கு துவங்கினார்.
அருள்தந்தை லூர்து ராஜ், கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்துவின் பிறப்பு மட்டும் அல்ல நாம் மனத்தூய்மையோடு, குடும்பத்துடன் ஒன்றாய் இருப்பது என்னும் செய்தியை அனைவருடனும் பகிர்ந்தார். வீடு ஒவ்வொரு மனிதனுக்கும் மகிழ்ச்சி கிடைக்கும் இடம், நிம்மதி. கிடைக்கும் ஒரே இடம் என்பதை உணர்த்தினார்.
மாலை சிற்றுண்டிக்கு பின் 5மணியளவில் திருமதி.கோல்டா மற்றும் திருமதி.ராஜி தொகுத்து வழங்க, விழா ஆரம்பமானது. தலைவர் திரு.சவேரியார் வரவேற்புரை வழங்கினார். ஆன்மீக ஆலோசகர் திருத்தந்தை.ஞானப்பிரகாசம், தன்னால் கிறிஸ்துமஸ் விழாவிற்கு வர இயலா விட்டாலும் தனது அன்பு செயதியை படக்காட்சியாக அனுப்பியிருந்தார்.
முதல் நிகழ்ச்சியாக சிறுவர்கள் இயேசு பிறப்பை நாடகமாக நடித்து காட்டினார்கள். இந்த நிகழ்ச்சியை திருமதி. ரூபா சிறப்பாக வடிவமைத்திருந்தார்கள். இரண்டாவதாக திரு. ஜெரால்டு, திருமதி. நிர்மலா, திருமதி. கோல்டா, திருமதி. சூசன் ஆகியோர் 80களின் carol இசை நிகழ்ச்சியை கண்முன் அருமையாய் கொண்டுவந்தனர்.
அடுத்தபடியாக சிறுமிகள் நடனம் கலகலக்க அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்ததால் மீண்டும் ஆடுமாறு கோரினர். சிறுமிகளும் அதே உற்சாகத்துடன் திரும்பவும் ஆடி அசத்தினர. அடுத்தபடியாக இயேசு பிறப்பின் பின்னணியில் இக்கால நடைமுறையை கண்முன் ரசிக்கும் விதத்தில் பெரியவர்கள் நடத்தி அசத்தினார்கள்.
அடுத்து சிறுவர்களின் இசை நிகழிச்சி கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தாய் அமைந்தது. பின் நம் அழகு பதுமைகளின் அற்புத நடனம் காண்போர் கண்ணை கவர்ந்தன, அடுத்தபடியாக, திருமதி. நிர்மலா அவர்களின் தலைமையில் இனிமையான பாடல்களின் இசை தொகுப்பு மூலமாய் அனைத்து குடும்பங்களும் பங்கேற்கும் விதமாக பாடல் வரிகள் திரையில் காண்பிக்கப்பட அனைவரும் சேர்ந்து அழகாய்ப் பாடினார்கள்.
வருடாவருடம் நடைபெறும் விவிலிய வினாவிடை நிகழ்ச்சி இம்முறை நவீன தொழிநுட்ப உதவியால் கைபேசியில் இருந்தபடியே அருமையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை திரு. ஜெயராஜ் மற்றும் திரு. ஸ்டான்லி அவர்கள் ஒருங்கிணைத்தார்கள்.
அடுத்து ஆஷீஷ் பிரான்சிஸ் மற்றும் ஆல்ட்ரின அந்தோணி இணைந்து வழங்கிய கிட்டார் & டிரம்ஸ் இசை நிகழ்ச்சி மிக அருமையாக அனைவரையும் இருக்கையில் கட்டி போட்டது.
எப்பொழுதும் பாடி அசத்தும் பாடகர் குழு, பாட்டு மட்டும் அல்ல எங்களுக்கு பாடிக்கொண்டே ஆடவும் தெரியும் என “கொட்டும் பணியில் குளிர்நிலா” என ஆடிப் பாடி அசத்தினார்கள் .
புதிய உறுப்பினர்களை குடும்பங்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் ஒருவொரு குடும்பமும் இன்னொரு குடும்பத்தை வீட்டிற்கு அழைத்து உணவு பரிமாறி அறிமுகப்படுத்தும் விதமாக, காகிதத்தில் பெயர்கள் எழுதப்பட்டு ஒருவொரு குடும்பமும் ஒரு பெயர் எடுத்து அறிவித்தனர், திரு ஸ்டான்லி அவர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தினார்
இளைஞர்களின் இசைக்குழு ஆயத்தமாகும் நேரத்தில் திருமதி.கோல்டா மற்றும் திருமதி.ராஜி அனைத்து குடும்பகளின் தமிழ் ஆளுமையை பரிசோதிக்கும் வகையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திருக்குறளை சொல்லவைத்தது, அனைவர் மத்தியில் வரவேற்பு பெற்றது
விழாவின் கடைசி நிகழ்ச்சியை மிக அருமையாக இளைஞர்களின் இன்னிசை குழு வழங்கினார்கள். திரு. லாசர் மற்றும் திரு. ஜெரார்ட் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தந்தார்கள். ஜெயராஜ் அவர்கள் நன்றியுரை தெரிவிக்க இரவு விருந்திற்குப்பின் இன்பத்திருநாள் நிறைவிற்கு வந்தது
என்ன ஓர் அருமையான தினம்!! அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தத் தினம். இந்த நிகழ்வுகள் இறைவனால் கொடுக்கப்பட்டப் பரிசு, இதே ஆனந்த உணர்வோடு எல்லா நிகழ்வுகளிலும் பங்குக் கொள்ள உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். நன்றி.
Xmas 2019 Message from RTP Tamil Catholics Spiritual Director Fr. Gnanapragasam.
Video: Joseph Prem Anand