Spring Social – April 27, 2019

RTP தமிழ் கத்தோலிக்கச் சங்க உறுப்பினர்களின் வருடாந்திர வசந்த சுற்றுலா

படைப்பு : ராஜி ஆதர்ஷ்

RTP தமிழ் கத்தோலிக்கச் சங்க உறுப்பினர்களின் வருடாந்திர வசந்த சுற்றுலா இந்த வருடம் 2019, ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி வெற்றிகரமாக நடந்தது.
இந்த வருடமும் RTP தமிழ் கத்தோலிக்க உறுப்பினர்கள் Crabtree lake, Dogwood shelter இடத்தில் கூடி சந்தித்தோம் . குழுக்கள் அமைத்து, விழாவின் பொறுப்புகள் அனைத்தும் உறுப்பினர்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

தன்னார்வ உறுப்பினர்கள்:
ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு – சதீஷ்
அமைப்பு – விவேக் மற்றும் சதீஷ்
உணவு ஒருங்கிணைப்பு – நிர்மலா, சதீஷ்
ஜோடி விளையாட்டுகள் – விவேக், ஸ்டான்லி
குழந்தைகள் விளையாட்டுகள் – ஜெசிகா, ஹன்னா மற்றும் இளைஞர் குழு

நடத்திய விளையாட்டுக்கள்:
கிரிக்கெட்
பந்து வீச்சு, மட்டை பந்து
ஜோடி : பந்தை எடுத்து நட
கரண்டி -நிலக்கடலை நடை
செய்தித்தாள் ஜோடி விளையாட்டு

காலை 9 மணியளவில் தன்னார்வ உறுப்பினர்கள் சுற்றுலா இடத்தை அடைந்தனர்.9:30 மணியளவில் முன்கூட்டியே வரும் உறுப்பினர்களுக்கு அமைப்பை ஏற்பாடு செய்தனர். உறுப்பினர்கள் ஒருவர் ஒருவராக வர ஆரம்பித்தார்கள். அனைவரும் வரும் வரை மதிய உணவுகள் வரிசையில் வைக்கப்பட்டன.
மட்டை பந்து குதூகலமாக தொடங்கியது, ஆண் உறுப்பினர்கள் மட்டை பந்து ஆட்டத்தில் ஆரவாரித்தனர்.மதியம் 12:30 மணியளவில் மதிய உணவுகள் முதலில் குழந்தைகளுக்கும் , பிறகு பெரியவர்களுக்கும் வழங்கப்பட்டன. பின் உறுப்பினர்கள் பந்து வீச்சு ஆட்டத்தை விளையாட ஆரம்பித்தனர்.

1:30 மணியளவில் பலரது வீட்டு உணவு அறுசுவையாக இருந்தது,அனைத்து உறுப்பினர்களும் உணவு உண்ணத் தொடங்கினார்கள்.

2:00 மணியளவில் சிறுவருகளுக்கான பந்தை எடுத்துநட விளையாட்டு ஆரம்பித்தார்கள். குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக ஆடினர். குழந்தைகள் விளையாட்டுப் பகுதியில் சருக்கு மரம், வளைவுக் கம்பி விளையாடத் தொடங்கினர். ஒரு புறம் சிறுவர்கள் அவர்கள் விரும்பிய ஆட்டத்தை ஆட மறுபுறம் பெரியவர்கள் அவர்களுக்கான விளையாட்டை ஆடத் தொடங்கினர்.

முதல் ஆட்டமாக ஜோடிகள் பந்தை கீழே விழாமல் ஒரு புறம் இருந்து மறுபுறம் சேர்ந்தே கடந்து சென்று ஆடி மகிழ்ந்தனர். பின் செய்தித்தாள் மீது கணவன் மனைவி ஏறி கீழே விழாமல் போட்டியை ஆடினர் , அதில் கால் மட்டும் கீழே இருக்க அவர்களின் அன்பு மேலோங்கி நின்றது. ஆட்ட இடைவேளையில், ஐஸ் கிரீம் கொடுக்கப்பட்டது , சிறுவர்கள் மகிழ்ச்சியில் துள்ளினர்
பெண் உறுப்பினர்கள் கரண்டி -நிலக்கடலை நடை ஆட்டத்தை ஆடி குதூகலித்தனர்.


4:00 மணியளவில் பெண் உறுப்பினர்கள் சுடச்சுட பஜ்ஜி சுடும் ஏற்பாட்டை ஆரம்பித்தார்கள். பெண்கள் இரு குழுக்களாக சமையல் வேளையில் இறங்கினர். முதல் குழு: வித்யா, அவிலா, அனிதா, ஜஸ்டினா, ஹென்னா உருளைக்கிழங்கு, வெங்காயம், வாழைக்காயை அருமையாக வெட்ட, இன்னொரு குழு: ராணி , கோல்டா மசாலாவை பிசைய, சுடச்சுட ஆரம்பமானது பஜ்ஜிக் கடை.
அடுப்புத் தீ பரவாமல் இருக்க தலைவர் சவேரியார் தடுப்பு அட்டை தயார் செய்து வைக்க, பஜ்ஜி சுடும் பணி தொடங்கியது. முழு அணியும் தடுப்புச் சுவராக பிளாஸ்டிக் பையைப் பிடித்து நின்றனர். சுவையான பஜ்ஜி பரிமாறத் தொடங்கப்பட்டது.
சமையலில் பெண்களுக்கு ஆண்கள் சளைத்தவர்கள் இல்லை என நிரூபிக்க ஆண்கள் அணி களம் இறங்கியது. ஆதர்ஷ் மற்றும் ஆரோக்கிய ராஜ் சமையல் பணியை கையில் எடுத்துக்கொண்டனர். ஆண்கள் அணி சதீஷ், அந்தோணி, பால், சவேரியார் தடுப்புச் சுவர்களாக நின்றனர், மட மட வென பஜ்ஜிகள் சுடப்பட்டன.
பஜ்ஜி சுட்டு முடிப்பதற்கு முன் BBQ கிரில் லாசர் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. சுடச்சுட கோழி பர்கரும், காய்கறி பர்கரும் தயாராயின.
மறுபுறம் பூவைச் சுற்றும் வண்ணத்துப் பூச்சிகளாய், குழந்தை ஆதிராவைச் சுற்றி சிறுமிகள் கூட்டம். அரங்கேறியது பாடல், நாடகம், கதை கூறும் போட்டி, யாருக்கும் யாரும் சளைத்தவர் இல்லை என சிறுமிகள் போட்டி போட்டுப் பாட்டுப் பாடினார்கள்.
BBQ கிரில் சிக்கனை ருசிக்க, பெண்கள் ஒரு புறம் பூங்கா உலா முடிக்க , சிறுவர்கள் ஆட்டத்தில் திளைக்க நெருங்கியது கிளம்பும் நேரம். மின்னலாகப் பறந்து வந்த அனைத்து உறுப்பினர்களும் துப்புரவுப் பணிய த் தொடங்கினர். பிரிந்து செல்ல மனம் இல்லாமல் பிரியா விடை கொடுத்து அவரவர் வாகனத்திற்குச் சென்றனர்.
என்ன ஓர் அருமையான தினம்!! அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்த தினம். இந்த நிகழ்வுகள் இறைவனால் கொடுக்கப்பட்டப் பரிசு, இதே ஆனந்த உணர்வோடு எல்லா நிகழ்வுகளிலும் பங்கு கொள்ள உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். நன்றி.